Uthayam Canada : · நொத்தாரிஸ் துரைசிங்கம் Founder of the northern sports club . அரசியல்வாதி , தொழில் அதிபர் ,ஆசிரியர் , ( குறுகிய காலம் யாழ் செங்குந்த இந்து கல்லூரி ஆசிரியர் )ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியவர். அன்பானவர் அமைதியானவர் இனிமையாக எல்லோருடனும் பேசி பழகுவார். எல்லோருக்கும் தெரிந்தவர். பழகிய நண்பர்கள் தெரிந்தவர்கள் பழைய ஞாபகங்களை நினைவு கூர்ந்து பதிவு செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
Stan Giri :; A great person. Helped tons of young people by employing or finding employment for them . A well known figure in the community. I think he was a councilor in the jaffna municipal council. Saro Ramalingam : துரைசிங்கம் எமது சம்பந்தி. அவர் ஒரு சமாதான நீதிவானுங்கூட . எவ்வளவோ குடும்பங்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்த பெருமகன். துரைசிங்கண்ணை என்று தான் அனைவரும் அன்பாக அழைப்பார்கள். அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடையட்டும். Sriravindrarajah Rasiah : இவரிடம் பலரும் தங்கள் பிரச்சனைத் தீர்க்க வருவதுண்டு. நல்ல முகராசிக்காரர். தமிழரசுக் கட்சியின் ஆரம்ப ஸ்தாபகர்களில் ஒருவர். Vasavan Vasu இலங்கைக்கு insurance company அறிமுகப்படுத்தியவர் மஸ்கன் கார்த்திகேசு, ராம சாமி பரியாரியார் அவர்களின் உறவினர்.
Rams Ramani : அவர் தான் தமிழரசு கட்சியை வளர்த்தவர். திரு ஆலாலசுந்தரத்தை வளர்த்தவர்களில் அவரும் ஒருவர். பழகுவதற்கு இனிமையானர் எளிமையானவர். பந்தா எதுவும் இல்லாதவர். உதவி நாடிச் செல்பவர்களை ஏமாற்றாமல் செய்து கொடுப்பார்.
Bala Sivagnanam : He was a famous Notary public and a very brilliant person also the founder of the Nothern Sports club as well in our neighborhood. He was holding several positions such as chairman of the Nallur village council and also a member of the J/ Municipal council. He was one of the founders of the Federal Party too. He was a very helpful person. His contribution to politics and other services are very much appreciated. Such a wonderful person is no more with us. Fondly remembered.
Kumaran Kathir : துரைசிங்கம் அவர்கள் எமது ஊரில் மறக்க முடியாத முகம்.. எப்படி??? அது குதிரை பந்தயம் ஆகட்டும், ஊரின் விளையாட்டு சம்பந்தமான விஷயம் ஆகட்டும் தூர நோக்கு பார்வை கொண்ட மனிதர்..,,,, தானும் சமூகமும் சிறந்து விளங்க பாடு பட்ட சிறந்த மனிதர்....நாமெல்லாம் உலக சரித்திரத்தை தெரிந்து கொள்ள ஐயா அவர்களின் சிந்தனையில் ஊருக்கு ஒரு படிப்பாக சாலை ( library ) கொண்டுவந்த பெரும் மனிதர்
தனது பணத்தில் ஊருக்கு உலகம் சார்ந்த விடயங்களை நாட்டின் பத்திரிகை மூலம் தனது மக்களுக்கு அறிவை சேர்ந்த நல்ல பண்பாளர்...எனது தந்தை மூலம் சிறு வயதில் அவருடன் உறவு முறை மூலம் பழகும் காலம் கிடைத்தது .. அவரது உடை வெள்ளை சுருட்டு என்பன என்னை கவர்ந்தது...எல்லோரையும் சேர்த்து வசீகரித்து செல்லும் தன்மை என்னை கவர்ந்தது...தனது பணத்தில் எமது ஊரில் ஒரு MGR என்றால் அது துரைசிங்கம் அவர்கள் தான்....
ஏழைகளுக்கு தனது பணத்தில் வேலைவாய்ப்பு, உதவி, ஊர்க்கு நன்மை செய்யும் தன்மை,.... இன்று அரசுடன் சேர்ந்து பணம் பிடுங்கும் ஊருக்கு நன்மை செய்பவர்கள் தான் அதிகம்....துரைசிங்கம் அவர்கள் 70 தொடக்கத்தில் தனது தாயார் பெயரில் எமது ஊரில் பஸ் தரிப்பு நிலையம் மற்றவர்கள் வியக்கும் வண்ணம் அழகாக பருத்தித்துறை பஸ் போக்குவரத்து வழியில் திறமையாக வேறு ஊரில் இல்லாதவாறு வடிவமைத்திருந்தார்.. இதை கண்ணுற்றவன் நான்.. அறிந்தவர்கள் பகிரவும்...நொர்தேர்ன் விளையாட்டு கழகம், மக்கள் சனசமூக நிலையம், வாலையம்மன் சனசமூக நிலையம் என்று எமது ஊருக்கு விளையாட்டையும், உலக பந்தில் நடக்கும் புதினங்களையும் கொண்டு சேர்ந்ததில் மட்டுமன்றி எமது அறிவையும் வளர்ந்த பெருமை இவரை சாரும்....
நல்ல விடயங்கள் கிராமோதய சபை மூலம் தேர்தலில் போட்டி நின்று ஊரின் நன்மைகிக்கு பாடு பட்டவர் செங்குந்த ஒழுங்கையில் புழுதி நிலம் இவர் மூலம் தார் கண்டது.. செப்பனிடப்பட்டது.. யாழ் மாவட்டத்தில் இவர் மூலம் காப்புறுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது..இவரின் படத்தை முகவலையில் பிரசுரிப்பதுக்கு நான் சுரேஷ் அண்ணாவுடன் தொடர்பு கொண்டுபெற்றுருந்தேன்..அதன் பெறுபேறு தான் இது ... இவர் உள்ளவரை நமது ஊர் வாழ்ந்தது...இவர் மூலம் நான் துடுப்பெடுத்தாட்டம் , வலை பந்தாட்டம், கால் பந்து என்று எல்லாம் கற்றோம்.. புதல்வர்களும் உதவி செய்தார்கள்.இவரது இறுதி ஊர்வலம்2 or 3 மைல்கள் மக்கள் வெள்ளத்தில் நடந்ததை கண்ணுற்றுளேன்.....
ஊரில்..பெரிய உதவிகள் செய்த பெரிய ஆத்மா சாந்தியடைய என்றும் எனது சிரம் தாழ்த்திய இறை சிந்தனைகள்
Radha Manohar : அரசியல், சட்டம், வர்த்தகம், சமூகப்பணி என்று பல துறைகளிலும் ஒரே நேரத்தில் ஓயாமல் கடமையாற்றிய ஒரு உண்மையான ஹீரோவாகத்தான் அமரர் திரு துரைசிங்கம் அவர்கள் வாழ்ந்தார்கள் . வாழ்க்கையில் எல்லாவிதமான ஏற்றங்களையும் மட்டுமல்லாது பல சோதனைகளையும் சந்தித்து இருக்கிறார். எந்த ஏற்றத்திலும் தாழ்விலும் உணர்ச்சி வசப்படாமல் மிக தைரியமாக அவற்றை சந்திக்கும் ஆற்றலை இவரது எதிரிகளால் கூட புறந்தள்ளி விடமுடியாது.
எந்த பெரிய சிக்கலையும் தீர்க்கும் மதிநுட்பம் என்பது இவரது தனி சிறப்பாகும் இவரது மதிநுட்பம் உண்மையில் எவருக்கும் வாய்க்காதது. திரு துரைசிங்கம் அவர்களை நாடி தினமும் ஏராளமானோர் அவரது வீட்டு முற்றத்தில் காத்து நிற்கும் காட்சியை எல்லோரும் அறிவார்கள் .
எல்லாவற்றிலும் பார்க்க இவர் ஏழை பணக்காரன் என்ற பேதமில்லாமல் எல்லோரையும் சமமாக அன்போடு நடத்தும் சமரச நோக்கம் கொண்டவர் . இவரிடம் உதவி கேட்டு வருபவர்கள் மனம் கோணாமல் கூடுமானவரை உதவும் உயரிய பண்பாளர். ஐம்பதுகளில் இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் இருந்து எஸ் ஜெ வி செல்வநாயகம் திரு வன்னியசிங்கம் ஈ எம் வி நாகநாதன் ஆகியோரோடு திரு துரைசிங்கம் அவர்களும் பிரிந்து வந்து இலங்கை தமிழரசு கட்சியை தொடங்கினார்கள். தமிழரசு கட்சியின் பிரசார நடவடிக்கைகளுக்கு இவரின் ராணி டூர்ஸ் அண்ட் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து இலவச சேவையில் ஈடு பட்டது.
இவரது பேருந்து சேவை அரசினால் தேசிய மயமாக்கதாக்கப்பட்ட போது அதில் பணியாற்றிய பலருக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் வேலையை வாய்ப்பு கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்தார். தமிழரசு கட்சியின் முக்கிய தூணாக இருந்து தனது நஷனல் பிரின்டர்ஸ் அச்சகம் மூலம் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து கொடுத்தார் . இவரின் பொது சேவைகள் எல்லாமே எந்த பிரதிபலனும் கருத்தாத சேவைகளாகும். இவரது காப்புறுதி நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டது . அதில் பணியாற்றிய பலருக்கும் இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்
அறுபதுகளில் இலங்கையில் திரைப்பட இறக்குமதி அனுமதி மூன்று பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே இருந்தது . சிலோன் தியேட்டர்ஸ் . சிலோன் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் . சினிமாஸ் லிமிடெட் ஆகியவற்றின் ஏகபோக உரிமையை முறியடித்து இவர் இறக்குமதி திரைப்பட இறக்குமதி அனுமதியை பெற்றார். சினிடோன் லிமிடெட் என்ற பெயரில் திரைப்பட விநியோகத்தை தொடங்கினார். லவகுசா, விநாயக சதுர்த்தி. அன்பு வடிவம். அந்தமான் கைதி.( MGR ) போன்ற படங்களை இறக்குமதி செய்து விநியோகித்தார். தியேட்டர்கள் கட்டுவதற்கு யாழ் நகர மத்தியில் ஒரு பெரிய காணியை வாங்கி இருந்தார். பின்பு ஏனோ அந்த திட்டத்தை ஒத்தி வைத்தார் .
பின்பு அந்த தொழிலில் ஈடுபட நேரம் போதாமையினாலோ என்னவோ தெரியவில்லை அந்த இறக்குமதி அனுமதி லைசென்ஸை எஸ் தி தியாகராச என்பவருக்கு வழங்கினார் .
அவர் பிற்காலத்தில் பிரபலமான திரைப்பட (STR ) விநியோகஸ்தர் ஆனார் இவர் யாழ் மாநகர சபை அங்கத்தவராகவும் நல்லூர் பிரதேச சபை தலைவராகவும் பதவிகள் வகித்தார் . அமரர் திரு துரைசிங்கம் அவர்கள் மறைந்து சுமார் நாற்பது வருடங்கள் ஆகிவிட்டன .ஆனாலும் இன்றும் பலரும் இவரை அன்போடும் நன்றியோடும் நினைவு கூறுவார்கள்
Sriravindrarajah Rasiah : செங்குந்த இந்துக் கல்லூரி, பரமேஸ்வராக் கல்லூரிகளில் கல்வி கற்று பாலபண்டிதர் பட்டம் பெற்ற துரைசிங்கம் அவர்கள் சில காலம் செங்குந்தாக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார். அதன் பின்னர் நொத்தாரிஸ் பரீட்சையில் தேற்றம் பெற்று பிரசித்த நொத்தாரிசாக பணியாற்றினார். தமிழரசிக் கட்சியின் பிரதம ஆரம்பகால உறுப்பினரான இவர்ஶ்ரீ போராட்டத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். 1919ஆண்டு பிறந்த துரைசிங்கம் அவர்கள் தனது 60வது வயதில் அமரரானது எங்கள் சமூகத்திற்கு பெரிய இழப்பானது.
Radha Manohar : அறுபதுகளில் கொழும்பு காலி முகத்திடலில் நடந்த சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட்டு போலீசின் தாக்குதலுக்கு இலக்கானார் .இவரது உடலில் அந்த தழும்புகளும் உள்ளது .
Sriravindrarajah Rasiah : அன்னாரின் நினைவு மலரில் சண்முகநாதன் (மணி) அண்ணர் எழுதிய இரங்கல் கட்டுரையின் பகுதி: “காலிமுகத் திடலில் காடையர்கள் இவரின் முதுகில் சப்பாத்துக் காலால் உதைத்த போதும் புன்சிரிப்புடன் சாந்தமே உருவாந் அமர்ந்திருந்த பெருந்தகை. 1957ஆம் ஆண்டு ஶ்ரீ போராட்டத்தில் கலந்தும், 1958ஆம் ஆண்டு மூன்று மாதம் தடுப்புக் காவலில் இருந்து துன்புற்ற நேரத்தில் எவ்வித கலக்கமும் இன்றி இனத்தின் விடுதலைக்காகவும், தமிழ் ஈழ மீட்சிக்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் தம்மால் இயன்ற உதவிகளையும், பொருட்களையும் வாரி வாரி இறைத்து மன ஆறுதலுடன் அமரரானார்”
Radha Manohar : அமரர் துரைசிங்கம் அவர்களோடு ஒரு ஒரு முறை மட்டுமே பேசும் வாய்ப்பு எனக்கு கிட்டியது எனது பதின்ம வயதுகளில் அவரது வீடு கட்டிக்கொண்டிருந்த சமயம் சைக்கிளில் நண்பர்களோடு பேசிக்கொண்டே அருகில் சென்றுவிட்டேன் .
அப்போது அந்த வீட்டுக்கு ஒரு கதவு பொருத்துவதை பற்றி சிலரோடு பேசிக்கொண்டே இருந்தவர் . திடீர் என்று என்னைப்பார்த்து இந்த கதவு நன்றாக இருக்கிறதா என்று கேட்டார். முன்பின் பேசியும் அறிமுகம் இல்லை . மேலும் நானோ சின்னபையன் என்னிடம் ஏன் இது பற்றி கேட்க்கிறார் என்றும் புரியவில்லை . ஏதோ நன்றாக இருக்கிறது என்று தலையாட்டி ஏதோ சொன்னேன் . இந்த ஒரு தடவைதான் நான் அவரோடு பேசியது . சில வருடங்களுக்கு பின்பு எனது கல்யாணம் நடந்து சில வருடங்களுக்கு பின், 2001 இல் நான் கனடாவில் இருந்து Glory யோடு யாழ்ப்பாணம் சென்றேன் .
அந்த வீட்டின் கதவை திறக்கும்போது திடீர் ஏன்னு ஞாபகம் வந்தது .. அடடே இந்த கதவு நன்றாக இருக்கிறதா என்று மாமா கேட்டாரே? இதை எப்படி கருதுவது என்றே எனக்கு புரியவில்லை . தற்செயலான சம்பவமா? அல்லது அவரது உள்ளுணர்வு அவருக்குள் இருந்து பேசியதா என்று தெரியவில்லை . ஆனால் அந்த வீட்டு கதவை திறக்கும் போதெல்லாம் அவரின் அந்த கேள்வி ஞாபகத்திற்கு வரும்
Rasty Ganendran : நல்ல மனிதர். எங்கள் சமூகத்தில் ஒரு தலைவனாக வந்தார்
No comments:
Post a Comment